215. வீரட்டேஸ்வரர் கோயில்
இறைவன் வீரட்டேஸ்வரர்
இறைவி சிவானந்தவல்லி
தீர்த்தம் பெண்ணை நதி
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருக்கோவிலூர், தமிழ்நாடு
வழிகாட்டி விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் பெண்ணை நதியின் தென்கரையில் திருக்கோவிலூருக்கு சற்று முன்பாக கீழையூர் என்ற இடத்தில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirukovilur Gopuramஅட்ட வீரட்டானங்களில் ஒன்று. சிவபெருமான் அந்தகாசுரனை சம்காரம் செய்த தலம். சுவாமிக்கும், அம்பிகைக்கும் தனித்தனி கோயில்கள். இருவரும் மேற்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் பெரிய லிங்கம், அம்பிகையும் சுமார் 5 அடி உயரம். பிரகாரத்தில் உள்ள அந்த சம்ஹார மூர்த்தி உற்சவர் சிலை அற்புதமாக உள்ளது.

Tirukovilur Moolavarஇத்தலத்தில் உள்ள விநாயகப் பெருமானை வணங்கி ஔவையார் 'விநாயகர் அகவல்' பாடினார். விநாயகர் அவரை தமது துதிக்கையால் தூக்கி கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார். இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் ஆறுமுகத்துடன் (சுமார் நான்கடி உயரம்) வள்ளி தெய்வானையுடன், மயில் மீது காட்சி அளிக்கின்றார்.

Tirukovilur Utsavarமெய்ப்பொருள் நாயனார் அவதாரம் செய்து ஆட்சி புரிந்த தலம். அம்மன் கோயிலுக்கு அருகில் அவரது சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த நரசிங்க முனையரையர் அவதரித்த தலம். சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற தலம். காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு : 93456 60711

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com